கோவை: கஜா புயலால் கோவையில் அதிக மழை பெய்ய வாய்ப்பில்லை எனவும், கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கஜா புயல் நவம்பர் 14-ம் தேதி மாலை கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களான கடலூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளுர் வழியாக நவம்பர் 15-ம் தேதி தெற்கு ஆந்திராவிற்கு செல்கிறது.
இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு பாதிப்பு இல்லை. மேலும் கஜா புயல் கடக்கும் போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த பகுதிகளில் காற்று வீச வாய்ப்புள்ளது. நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது, எனினும் பயப்பட தேவையில்லை. அதே நேரத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
பாதிப்பு
கஜா புயலால் கோவைக்கு எந்த பாதிப்பும் இல்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் நேர வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும், இரவு நேர வெப்பநிலை 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரையில் பதிவாக வாய்ப்புள்ளது. வானம் பகுதி நேர மேகமூட்டத்துடன் காணப்படும். கோவையைப் பொறுத்த வரையில் காற்று 10 -12 கிலோ மீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது.
வேளாண் பெருமக்கள் முடிந்த அளவு மழை நீரை மரங்களுக்குப் பாத்திகட்டியும், பண்ணை குட்டைகளில் நீர் சென்றடையும் படி ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் மழை நீரை சேமிக்க முடியும். நீர் நிலைகளுக்கு மழை நீர் சென்றடையும் படி நீர் வழிப் பாதைகள் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்." என்றார்.